ரூ.5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்: ராமதாஸ் கண்டனம்!

Published : Sep 19, 2023, 12:41 PM IST
ரூ.5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்: ராமதாஸ் கண்டனம்!

சுருக்கம்

ரூ.5000 இருந்தால் தமிழ்நாட்டில் போலி சாதிச் சான்றிதழ் பெற்று விடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகிய பல்வேறு  தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இது தொடர்பான அரசாணைகளும் உள்ளன.

ஆனாலும், போலி சான்றிதழ் பெறுவது அதிகரித்து வருவதாகவும், இதனால் உண்மையாகவே பலன் கிடைக்கக் கூடியவர்கள் பலன் பெறாமல் போலியானவர்கள் பலன் பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

சதுரங்க வேட்டை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்!

இந்த நிலையில், ரூ.5000 இருந்தால் தமிழ்நாட்டில் போலி சாதிச் சான்றிதழ் பெற்று விடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா? ரூ.5000 இருந்தால் போதுமானது. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில்  போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது.  அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்.” என பதிவிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!