பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது. என்னை மிகவும் கவர்ந்த மொழி தமிழ். தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடைபெற்றது.
undefined
தமிழ்நாடு மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள் ஆவார்கள். தமிழ்நாட்டிற்கு மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவருகிறோம். தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும், தமிழ்நாட்டை தன் இதயத்தில் வைத்துள்ளது பாஜக. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு திமுக எதுவும் செய்யவில்லை. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர்கள், பாஜகவின் வளர்ச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள்.
இன்று தமிழ்நாடு வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை, அவருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.
தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுக்கிறது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?