
அண்ணா பல்கலைக்கழகத்தில் அமர்சேவா நிறுவனத்தை சேர்ந்தவரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் பிரதமர் மோடி தங்க பதக்கங்களை வழங்கினார். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமர்சேவா நிறுவனத்தைச் சேர்ந்தவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: இனி மக்கள் கவலைப்பட தேவையில்லை.. ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு.!
அமர்சேவா நிறுவனம்:
குற்றாலத்திலிருந்து பத்துகிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் ஆய்க்குடி என்ற பகுதியை சேர்ந்த இராமகிருஷ்ணன் என்பவர், நான்காமாண்டு பொறியியல் பட்டப்படிப்புப் பயிலும்போது கடற்படை அதிகாரிக்கான பணிக்கான தேர்வில் கயிறுஏறும்போது கைதவறி கீழேவிழுந்தார். அதில் அவருக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழே உறுப்புகள் செயல்படா நிலையில் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அமர் என்ற மருத்துவர் ஒருவர் நம்பிக்கை ஊட்டியுள்ளார். இதை அடுத்து அவரது பெயரில் அமர்சேவா சங்கத்தை இராமகிருஷ்ணன் 1981 ஆம் ஆண்டு தொடங்கினார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
ஒரு கீற்றுக்கொட்டகையில் தொடங்கப்பட்ட இந்த சங்கம் இன்று 32 ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள அமர்சேவா சங்கவளாகத்தில் இன்று ஆரம்பப்பள்ளியும் நடுநிலைப்பள்ளியும் செயல்படுகிறது. மேலும் இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி மையமும் சிறப்பாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி ஆசியாவிலேயே சிறப்பான முதுகுத்தண்டுவடச் சிகிச்சை மையம் இங்குச் செயல்படுகிறது. அவரோடு சேர்ந்து கழுத்துக்குக்கீழ் செயல்படாத எஸ்.சங்கரராமன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக உழைத்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்காகத் தன்னையே தந்தவர் தான் அமர்சேவா சங்க நிறுவனர் இராமகிருஷ்ணன். இந்த நிலையில் அமர்சேவா நிறுவனத்தை சேர்ந்தவரை தான் பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார்.