
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று கிடைக்கும்… இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியாகவுள்ளது.
இந்த மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிபபிட்டு மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் முதல் மாணவர்களுக்கு, பள்ளியிலும் தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்களிலும், தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலில் இதுவரை மாணவர், பள்ளியின் பெயர் ஆகியவை ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் தமிழிலும் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது..