”ஸ்வாதி கொலை வழக்கு பட இயக்குனரை கைது செய்யுங்க” – ஸ்வாதியின் தந்தை மீண்டும் புகார்…

Asianet News Tamil  
Published : Jul 10, 2017, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
”ஸ்வாதி கொலை வழக்கு பட இயக்குனரை கைது செய்யுங்க” – ஸ்வாதியின் தந்தை மீண்டும் புகார்…

சுருக்கம்

please will arrest to suvathi kolai vazhakku movie director ramesh selvan says santhaana kobalakirushnan

ஸ்வாதி கொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் காவல் ஆணையர் அலுவலத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்‌ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தில், ஸ்வாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து ராம்குமார் சிறையில் இறந்தது வரை நடந்த சம்பவங்களை எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனை சிறிதும் கலக்காமல் அப்படியே படமாக்குகிறோம் எனவும், இதற்காக, இதில் தொடர்புடைய நபர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, விவரங்களை திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறோம் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து  இந்த சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்வாதி கொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்வாதியின் தந்தை கோபாலகிருஷ்ணன் காவல் ஆணையர் அலுவலத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றும் திமுக! இடுவாய் குப்பை கிடங்கிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!