கார்த்தி சிதம்பரத்தை டெல்லி வரவழைக்கத் திட்டம் - INX விவகாரம் ஆபத்தாய் முடியுமோ என்று கலக்கம்

 
Published : May 17, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
கார்த்தி சிதம்பரத்தை டெல்லி வரவழைக்கத் திட்டம் - INX விவகாரம் ஆபத்தாய் முடியுமோ என்று கலக்கம்

சுருக்கம்

Plan to invite karthick Chidambaram to Delhi - danger of being INX

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கை டெல்லி அழைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் ப.சிதம்பரத்துக்கு சொந்தமான அலுவலகம மற்றும் அவரது உறவினர்களது காபி எஸ்டேட்களில் அதிரடி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையே சிதம்பரம் மற்றும் அவரது மகனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக INX மீடியா விவகாரத்தை சி.பி.ஐ. தற்போது பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக கார்த்திக்கு நேற்று வருமான வரித்துறை சார்பாக சம்மன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் INX Media Private Ltd என்ற நிறுவனத்தின் இயக்குனர் இந்திராணி முகர்ஜி, மற்றும் பீட்டர் முகர்ஜி, ஆகியோருக்கும் குறுக்கு வழியில் உதவிகள் செய்து ஆதாயம் பார்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷீனா போரா கொலை வழக்கில் ஏற்கெனவே இந்திரா முகர்ஜி சிக்கலில் உள்ள நிலையில் அப்போது எடுக்கப்பட்ட பல முக்கிய தகவல்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கார்த்திக்கை டெல்லிக்கு அழைத்து பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் டெல்லிக்கு வருமாறு கார்த்திக்கு சம்மன் அனப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!