அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

By vinoth kumarFirst Published Feb 14, 2024, 8:10 AM IST
Highlights

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. 

Latest Videos

அதில், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துவக்கபள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 106985 ஆகும். இவ்வாசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கோல்டு திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை  ஆசிரியர்களில்  106985ல் மூன்றாக பிரித்து ஆண்டு ஒன்றிற்கு சுமார் 35600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். மேற்படி 35,600 ஆசிரியர்களுக்கு கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை தேசிய ஆசிரியர் நலநிதியிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!