
சேலம் அருகே வீரகனூரில் சி.ஆர்.பி.எப் வீரர் திருமுருகனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரிதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாமிட்டு தங்கிருந்தனர். அப்போது அங்கு வந்த 300 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் முகாமை சுற்றி வளைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 74வது படைப்பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் உயிருக்கு போராடி வந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
சுக்மாவில் மாவோயிடுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 25 வீரர்களில் 4 பேர் தமிழர்கள் ஆவர்.
தமிழக வீரர்கள் செந்தில் குமார், அழகுபாண்டி, திருமுருகன், பத்மநாபன் ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களின் உடல் அவரவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்த திருமுருகன் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரிதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மேலும், மதுரையை சேர்ந்த அழகுபாண்டியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரிதையுடன் தகனம் செய்யப்பட்டது.