
தமிழகத்தில் மட்டும் பெட்ரோல்,டீசல் விலை அதிரடியாக உயர்வு… எடப்பாடி அரசின் வரி விதிப்பால் அதிகரிப்பு…
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல் மற்றுமு டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. மாதம் இரு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல்,டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக திடீரென உயர்த்தியது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 78 காசுகளும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 76 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இது வரை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி வந்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் வரி விதிப்பால் விலை கூட்டப்பட்டுள்ளது.
இதற்கு பொது மக்களும், டீலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்,