மறுபடியும் முதலில் இருந்தா…? காலையில் அதிர்ச்சியான வாகன ஓட்டிகள்

Published : Sep 26, 2021, 07:55 AM IST
மறுபடியும் முதலில் இருந்தா…? காலையில் அதிர்ச்சியான வாகன ஓட்டிகள்

சுருக்கம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் வாகன ஓட்டிகளை மீண்டும் அதிர வைத்துள்ளது.

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரம் வாகன ஓட்டிகளை மீண்டும் அதிர வைத்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தமட்டில் நாள்தோறும் விலை நிர்ணயம் செய்வது என்ற நடைமுறை இருக்கிறது. அதன்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டு காலை 6 மணிக்கு அமலுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். ஆனால் இன்று டீசல் விலை சற்றே உயர்ந்துள்ளது. 21வது நாளாக பெட்ரோல் விலை மாற்றம் இல்லாமல் இருக்கிறது.

இன்றைய விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96 ஆக உள்ளது. ஒரு லிட்டர் டீசல் இன்று 23 காசுகள் அதிகரித்து ரூ.93.69 காசுகளாக உயர்ந்து உள்ளது. 3வது வாரமாக எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், தற்போது டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live today 10 December 2025: இவர்கள் டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை.. எல்லாமே இலவசம்.. முழு லிஸ்ட் உள்ளே