எகிறிய பெட்ரோல், டீசல் விலை… தலையில் அடித்து கொள்ளும் வாகன ஓட்டிகள்..

Published : Oct 01, 2021, 07:20 AM IST
எகிறிய பெட்ரோல், டீசல் விலை… தலையில் அடித்து கொள்ளும் வாகன ஓட்டிகள்..

சுருக்கம்

தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதன்படி நாள்தோறும் விலை அறிவிப்புகளில் மாற்றஙகள் காணப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எரிபொருள் விலை குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை என்றோ கடந்துவிட்டது.

இந் நிலையில் 2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்நது வாகன ஓட்டிகளை கதி கலங்க வைத்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து ரூ. 99.58 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

டீசல் விலை ஒரு லிட்டர் 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74 காசுகளாக உள்ளது. விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் விஜய்..! அதிகாலையிலேயே சாரை சாரையாக குவிந்த தவெக தொண்டர்கள்..
Tamil News Live today 18 December 2025: ஈரோட்டில் விஜய்..! அதிகாலையிலேயே சாரை சாரையாக குவிந்த தவெக தொண்டர்கள்..