
நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா ஆகியோர் மீது கோவை மாவட்டம் மேட்டுப்பளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜோதிகா, அண்மையில் ’நாச்சியார்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் வெளிவந்த உடனேயே பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் இந்த டீசரை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். இந்த டீசரில் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த ஒரு வார்த்தையும் பெண்களை இழிவுபடுத்தும் கெட்ட வார்த்தையாகவே இருந்தது.
இதைக் கேட்டதும், பலரும் கோபத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். ஜோதிகா, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இந்த வார்த்தையைச் சொல்லியுள்ளார் என்று கூறி, அவர் மீதும், படத்தின் இயக்குனர் பாலா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போர்க்கொடி உயர்த்தினர்.
இந்நிலையில், ஜோதிகா பெண்மையை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார் எனவே இந்திய தண்டனை சட்டப் பிரிவு 294 (b) மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 67 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மனு ஒன்று கோவை மாவட்டம் மேட்டுப்பளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.