
அவசர சட்டதையும் எதிர்க்குமாம் பீட்டா ....!
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரும்முயற்சிக்கு கூட, சட்ட வல்லுனர்கள் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்குமாம் பீட்டா.
தமிழகத்தில் பெருகி வரும் இளைஞர்களின் ஆதரவை மதித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் தற்போது, மாநில அரசே, அவசர சட்டம் இயற்ற முடிவு செய்து, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், தற்போது அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறி[பிடத்தக்கது.
பீட்டா:
அவசரச்சட்டம் தொடர்பான ஒவ்வொரு நகர்வையும் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உரிய நேரத்தில், அவசர சட்டத்திற்கு எதிராக சவால் விட போவதாகவும் விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவசர சட்டத்திற்கு எதிராக , சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.