#Breaking:அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பு.. இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 9:06 PM IST
Highlights

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் கோவில்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை அனுமதியளித்துள்ளது.
 

கொரோனா பரவல் தடுப்பு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுபாடுகள் குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலாளர், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

ஆலோசனை கூட்ட முடிவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து கொரோனா ஊரடங்கை பிப்ரவரி 10 தேதி வரை நீட்டித்து  உத்தரவு வெளியாகியுள்ளது.அதில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போல் பிப்.,1 ஆம் தேதி முதல் அனைத்து பல்கலைகழகங்கள்,கல்லூரிகள்,தொழில் பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் வழிப்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

மேலும் சமுதாய, அரசியல், மற்றும் கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்விற்கு தடை தொடரும்.பொருட்காட்சி நடத்த அனுமதியில்லை.அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.உணவங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 % வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உண்ண அனுமதி.திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேர் மட்டுமே அனுமதி.இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டும் அனுமதி.துணி மற்றும் நகைகடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.கேளிக்கை விடுதிகள் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,விளையாட்டுக்கள்,உணவகங்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள்  ஒரே நேரத்தில் 50 % பேருடன் இயங்க அனுமதி.அனைத்து திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அழகு நிலையங்கள், சலூன்கள்,அனைத்து பொழுதுப்போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

click me!