
நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் போட்டிபுரம் என்ற இடத்தில் மலையை குடைந்து நியூட்ரினோ திட்டம் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வந்தது.
இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் ஆய்வு பணிக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.