32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பேரறிவாளன்.. மகனை பார்த்து மகிழ்ச்சியில் பொங்கிய தாய்..

Published : Mar 15, 2022, 02:47 PM IST
32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பேரறிவாளன்.. மகனை பார்த்து மகிழ்ச்சியில் பொங்கிய தாய்..

சுருக்கம்

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.சென்னை புழல் சிறையில் இருந்து இன்று ஜாமினீல் வெளியே வந்த அவரை அவரது தாயார் அற்புதம்மாள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றார்.  

ராஜூவ் காந்தி கொலை வழக்கு:

முன்னதாக பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 1991ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பேரறிவாளனுக்கு  32 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக ஜாமீன் வழங்கபட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பேரறிவாளனுக்கு அவரது தந்தையின் உடல்நிலை ,பேரறிவாளனின் சிறுநீரக பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்கு தமிழக அரசால் பல முறை பரோல் வழங்கப்பட்டது. 

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தனு, நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழ அரசு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பிலும் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் சட்டபேரவையில் 7 பேர் விடுதலை குறித்து ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: "ஆருரா !! தியாகேசா !!" திருவாரூர் ஆழித்தேரோட்டம்.. பக்தர்கள் உற்சாகம் !!

பேரறிவாளனுக்கு ஜாமீன்:

இந்த சூழலில்தான் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவரை,அவரது தாயார் அற்புதம்மாள் ஆனந்தக்கண்ணீருடன் வரவேற்றார்.முதன்முறையாக ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் தனது தாயை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது  நிபந்தையுடன் ஜாமீன் வழங்கியுள்ளதால்,ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்.மேலும், சிறையில் உள்ள மற்ற 6 பேருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மக்களே உஷார்.. யூபிஎஸ் பேட்டரி வெடித்து விபத்து.. 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!