Tamilnadu Rains : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்.. எங்கு தெரியுமா ?

Published : Mar 15, 2022, 01:03 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்.. எங்கு தெரியுமா ?

சுருக்கம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் :

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். தமிழக உள் மாவட்டங்களில், இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை முதல் மூன்று நாட்களும், தேனியில் நாளையும், 18ம் தேதியும்; நீலகிரியில், 18ம் தேதியும் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!