
கோவை
வீடு கட்டி தருவதாக ஏமாற்றி மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அதுகுறித்துக் கவனமாயிருங்கள் என்றும் ஆட்சியர் அரிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அரிகரன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “கோவை மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக கூறி சிலர் தவறான தகவலை கூறி மக்களிடம் பணம் வசூலிப்பதாக நிறைய புகார்கள் வருகின்றன.
அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை நம்பி மக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் நேரடியாகவே மக்களிடம் தொடர்புகொண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தவறான செயல்களில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றும் நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடுவதாக கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.