கிருஷ்ணகிரியில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல்...

 
Published : Jan 22, 2018, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
கிருஷ்ணகிரியில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல்...

சுருக்கம்

People and students protesting against bus fares in Krishnagiri

கிருஷ்ணகிரி

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் மக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிலையம் அருகே மக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், இதனை நடைமுறைப்படுத்தி மக்களின் பணத்தை பிடுங்க திட்டம் போட்டுள்ள அதிமுக அரசைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் தமிழக அதிமுக அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

பேருந்து கட்டண உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த வழியாக வந்த பேருந்து நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி, சூளகிரி பேருந்து நிலையத்திற்குள் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புறவழிச்  சாலையிலே சென்று விடுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!