கொள்ளையோ கொள்ளை! கொள்ளைக்கு எல்லாம் கொள்ளை - வசூல் வேட்டையில் காவல்துறை...

 
Published : Feb 02, 2018, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
கொள்ளையோ கொள்ளை! கொள்ளைக்கு எல்லாம் கொள்ளை - வசூல் வேட்டையில் காவல்துறை...

சுருக்கம்

people affected by police who held in money hunt

சிவகங்கை

தமிழகத்தில் அண்மை காலமாகவே காவலாளர்கள் தங்களது விதிமுறை மற்றும் அதிகார வரம்புகளை மீறி செயல்படுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கடந்தாண்டு சல்லிக்கட்டு போராட்டத்தின்போது பைக், ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்தது. வீடுகளுக்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டது, மாணவர்களை, பெண்களை ஈவு இரக்கமின்றி அடித்தது.  திருப்பூரில் சாராய ஒழிப்பிற்காக போராட்டம் நடத்திய பெண்ணை காவல் அதிகாரி தாக்கியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதேபோன்றே பல்வேறு இடங்களில் காவலாளர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி இன்றுவரை செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட சென்னையில் காவலாளர் தாக்கியதால் கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் விரக்தியடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலாளார்களும் தங்கள் பங்கிற்கு மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க நினைப்பதே  இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம்.  இதை விடவும் மோசமான விமர்சனங்களை சமூக ஆர்வலர்களிடம் இருந்து பெற்றபின்பும் தங்களது காரியத்தில் கண்ணாக  இருக்கின்றத் காவல்துறை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் "இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக கையில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்" என்று கூறியது.

இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு உரிமம் வாங்காதவர்களில் பெரும்பாலானோர் தற்போது உரிமம் பெற்று வாகனங்கள் ஓட்டுகின்றனர். மேலும், காவலாளார்கள் கெடுபிடியால் காப்பீடு, ஆர்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்று வருகின்றனர். அதனையும் கையில் வைத்தே வாகனத்தை ஓட்டி வருகின்றனர்.

கிராமப்புற மக்களும் அதில் கவனம் செலுத்தி ஆவணங்களை வாகனங்களில் வைத்தே ஓட்டி வருகின்றனர். நெடுஞ்சாலைகளிலும், கிராமப்புற சாலைகளிலும் நிற்கும் காவலாளர்கள் சோதனையின்போது ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

ஒரு வருடத்தில் காவலாளர்களின் தொடர் சோதனையால் தலைக்கவசம், ஆவணங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பதால் விபத்துகள் குறைந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. ஆனால், தற்போது சோதனை என்ற பெயரில் காவலாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபது வழக்கமான ஒன்றுதான். அவர்களுக்கும் தானே மாதக் கடைசி. நீதிமன்ற தீர்ப்பின்போது, அனைவரும் உரிமம், காப்பீடு என அனைத்தும் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டியதற்கு, "எல்லாம் வெச்சிக்கிட்டு இவனுக்கு ஏன்டா தண்டம் அழணும்" என்பதே காரணம். அதனால்தான் அசல் ஓட்டுநர் உரிமம், தலைக்கவசம் கட்டாயம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை மக்கள்பயன்படுத்துகின்றனர்.

சமீப காலங்களில் காவலாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபதும், வழக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்திற்காக அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்கு போடுவதையும் சர்வ சாதாரணமாக செய்து வருகின்ன்றனர்.

இதற்கும் உதராணம் இருக்கிறது  டிவிஎஸ் 50 அதிவேகமாக வந்ததாகவும், இருசக்கர வாகனத்திற்கு சீட் பெல்ட் அணியவில்லை என்றும், காருக்கு ஹெல்மெட் போடவில்லை என்றும் வழக்குப்பதிந்து அபராதம் விதித்து அதற்கு பில் கொடுத்தவர்கள் நம் அதிமேதாவி காவல்துறை.

சிலர் இப்படி என்றால், இன்னும் பலர் அபராதம் விதிக்காமல் தனக்கு கிடைத்தவரை லாபம் என்று லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆதாயம் அடைகின்றனர். பணம் கொடுக்க மறுக்கும் நபர்களை காவலாளர்கள் வலுக்கட்டாயமாக தாக்குகிய சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும், உரிமத்தை ரத்து செய்வதாகவும் மிரட்டி ஆதாயம் பார்க்கின்றனர் இந்த "மக்களின் நண்பன்" காவல்துறை.

வாகன ஓட்டி ஒருவரிடம் ஆவணம் இல்லை என்றால், அவரை சோதனையிட்டால் தெரிந்துவிடும். அதேபோல் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தாலும், தற்போது போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதிவேகத்தில் வாகனம் ஓட்டி வருகிறார்கள் என்பதை யாரும் விளக்கம் தரமுடியாது. அதற்கான கருவியும் கிடையாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே காவலாளர்கள் அதிவேகம் என்று வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கின்றனர்.

குறிப்பாக இளம் வயதினர் யாராக இருந்தாலும் அதிவேகத்தில் வந்ததாக வழக்குப்பதிவு செய்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, "ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இத்தனை போக்குவரத்து வழக்கு பதிவு செய்து, பணம் வசூலிக்க வேண்டும்" என்று உயர் அதிகாரிகள் ஆணையிடுவதாக காவலாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இது உண்மை என்றாலும், மக்கள் மத்தியில் காவலாளர்கள்  சட்டத்தை மீறி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆவணங்கள் சரிபார்த்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது போன்று அதிவேகத்திற்கும், சீட் பெல்ட் அணிவதற்கும் ஒரு முடிவை நீதிமன்றம் வழங்க வேண்டும்.

மேலும், வாகன ஓட்டிகளை மிரட்டி ஆதாயம் தேடும் காவலாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!