மக்களை ஏமாற்றியதால், சாமியார் பாபா ராம்தேவ் நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்

First Published Dec 15, 2016, 3:45 PM IST
Highlights


மக்களை ஏமாற்றியதால், சாமியார் பாபா ராம்தேவ் நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்

ஹரித்துவார், டிச.16-

சாமியார் பாபா ராம்தேவ் ஆதரவில்சா நடத்தப்படும் பதஞ்சலி நிறுவனம் மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு பொருட்களை விற்பனை செய்தது உறுதியானதால்,  அந்த நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம்  விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரூ.5 ஆயிரம் கோடி

சாமியார் பாபா ராம்தேவ் ஆதரவில், பதஞ்சலி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் உணவுப்பொருள்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி வருகிறது. 

இந்நிலையில், இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள், மிகவும் சுத்தமானது, ஆயுர்வேத மருந்துகளால் தயாரிக்கப்படுகிறது என விளம்பரம் செய்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

வழக்கு

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் வகையில், கடந்த 2012-ம்  ஆண்டு ஹரித்துவார் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆய்வு

இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளாக தேன், கடுகு, உப்பு, ஜாம், மாவு உள்ளிட்ட பொருட்கள் தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆராய உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய உணவுக்தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வு நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. 

தரம் அற்றது

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரத்தில் தெரிவித்த அனைத்து விஷயங்களும் பொய் என்றும், தரம் இல்லாத பொருட்களை சந்தையில் விற்பனை செய்து நுகர்வோர்களை ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கையும் அளிக்கப்பட்டது. 

தீர்ப்பு

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி லலித் நரேன் மிஸ்ரா தீர்பளித்தார். அதில், பதஞ்சலி நிறுவனம் சுயமாக பொருட்களை தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்தின் பொருட்களை தங்களின் தயாரிப்புகள் என்று அட்டையில் எழுதி விளம்பரம் செய்து விற்பனை செய்கிறது. 

மேலும் பொருட்களின் தரமும், நிறுவனம் உறுதி அளித்தவாறு இல்லை. ஆதலால், நுகர்வோர்களை ஏமாற்றியது, தவறாக வழிநடத்தியது, உணவுத் தரக்கட்டுப்பாடுகளை மீறியது ஆகிய குற்றத்தின் அடிப்படையில் பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார். 

 

 

click me!