CM Stalin Campaign : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் "இந்தியா கூட்டணியை" ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தற்பொழுது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அவர் மக்கள் மத்தியில் பேசும்பொழுது.. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இது அமைதியான இந்தியா, அமளி ஆகிவிடும்".
"இதற்கு அண்மையில் பலரது மனதை உலுக்கிய மணிப்பூர் நிகழ்வுகள் சாட்சி. மணிப்பூர் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிபோல வாழ்ந்தார்கள், நமது எம்பிக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது தாய்மார்கள் அவர்களைப் பார்த்து கதறினார்கள். சில நாட்களுக்கு முன்பு குமரிக்கும், திருநெல்வேலிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்திருந்தார்".
திருப்பூர் குமரன் சிலைக்கு பட்டையடித்த பாஜக வேட்பாளர்; பாஜகவினரின் செயலால் பரபரப்பு
"தேர்தல் வந்துவிட்டது என்பதால் இப்பொழுது அடிக்கடி அவர் தமிழகத்திற்கு வந்து செல்கிறார், ஆனால் மாபெரும் வெள்ளம் வந்த பொழுது அவர் எங்கே சென்றார். தமிழகத்தின் தென் மாவட்டத்தையும், வட மாவட்டத்தையும் இருபெரும் இயற்கை பேரிடர்கள் ஆட்கொண்ட போது அவர் எங்கே போனார். சரி மக்களுக்கு நிதிதான் தரவில்லை, ஓட்டு கேட்டு நீங்கள் வந்த பொழுது அவர்களுக்கு ஆறுதலாவது சொன்னீர்களா?"
"ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றாலும், மக்களுக்கு செய்ய வேண்டியதை, உதவ வேண்டியதை செய்தே தீர வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டோம். மக்களுக்கு நோய்கள் பரவாமல் இருக்க 2500க்கும் மேற்பட்ட மருத்துவ முகங்களை நடத்தினோம். வேளாண் மக்களை பாதுகாக்க தனி நடவடிக்கை அப்பொழுது எடுக்கப்பட்டது".
"மக்களோடு மக்களாக ஒன்று இணைந்து அவர்களுக்கு என்னென்ன வேண்டும் என்பதை கேட்டு அறிந்து அமைச்சர்கள் செய்து கொடுத்தார்கள். நானும் டிசம்பர் மாதம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினேன். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 38 ஆயிரத்து 614 பேருக்கு, 118 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நான் செய்தேன்".
"எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அவரது கட்சி தொண்டர்கள் மத்தியிலேயே அந்தஸ்தை இழந்துவிட்டார். CAA சட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறார், திமுக அதை எதிர்த்தபோர்த்து, பாஜகவின் டப்பிங் குரலாக பேசிய எடப்பாடி பழனிசாமி, CAA சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினர்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அடேங்கப்பா! அருண் நேருவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வேட்புமனுவில் வெளியான விவரங்கள்!