ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

First Published Oct 6, 2016, 1:19 AM IST
Highlights


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டவர் மருத்துவமனை கழிவறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் காரணையை சேர்ந்த பாஸ்கரன் (58), கடந்த திங்கட்கிழமை அன்று ரத்தநாள சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வார்டு எண் 206 ல் அனுமதிக்கப்பட்டிருந்தவர் ரத்த நாள சிகிச்சைக்காக  பின்னர், மேல் சிகிச்சைக்க்காக சிறப்பு வார்டு  46 ல்  அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இவருடன் இவரது மனைவி ரோஸ் மேரி உடன் தங்கி இருந்தார். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கழிவறைக்கு செலவதாக கூறி பாஸ்கரன் சென்றார்.  ஆனால் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ரோஸ்மேரி கதவை தட்டியபோது திறக்காததால்  மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது  கழிவறைக்குள் பாஸ்கரன்  தான் அணிந்து இருந்த லுங்கியை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 

பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நோய் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மன உலைச்சலால் பாஸ்கரான் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

click me!