
சென்னை விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்கம், ரூ.23 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தின் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குவைத்தில் இருந்து வந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணவேணியிடம் இருந்து 900 கிராம் தங்கம் கடத்தி கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 900 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவரும் 800 கிராம் தங்கம் மற்றும் ரூ.23 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கிருஷ்ணவேணி, சிவராமனை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் 2 பேர் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.