தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து நோயாளி குதித்து தற்கொலை...

 
Published : Mar 05, 2018, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து நோயாளி குதித்து தற்கொலை...

சுருக்கம்

Patient jumping from the third floor of the private hospital

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை (46). ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மறைமலைநகரை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆஸ்துமா நோயின் தீவிரம் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்த பாவாடை. மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்துள்ளார், அதில் சம்பவ இடத்திலேயே பாவாடை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலைநகர் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் காவலாளர்கள் பாவாடையின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து காவலாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

நெஞ்சை உருக்கும் சோகம்..! அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் பலி..!
செங்கோட்டையனுக்கு சின்ன சங்கடமோ, மரியாதை குறைவோ வந்துடக்கூடாது..! புஸ்சியிடம் விஜய் போட்ட உத்தரவு