
ஈரோட்டில் மும்பை - நாகர்கோவில் விரைவு ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் இன்று மாலை 5 மணி அளவில் ஈரோடு ரயில்நிலையம் வந்தது. அப்போது பெட்டிகளில் இருந்து இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் என்ஜின் முன்பக்கம் சென்று அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
ரயில் பெட்டிகளில் தண்ணீர் நிரப்பக்கோரி பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பயணிகள் மறியலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விரைந்த நிலைய மேலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் தங்களது ஒன்றரை மணி நேரப் போராட்டத்தை கைவிட்டனர்.
தண்ணீர் கோரி நடைபெற்ற இம்மறியலால் ஈரோடு வழியாக கோவை செல்லும் செல்லும் ரயில்கள் நீண்ட தாமதத்திற்குப் பின் புறப்பட்டுச் சென்றன.