
மருத்துவ மேற்படிப்பில் 50 % இடஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு வகுப்புகளில் 50 % இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் முதுநிலை மருத்துவ கல்வி வகுப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகபடுத்தியதொடு கிராமப்புற மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
நீதிபதி சுப்பிரமணியன் மருத்துவ கவுன்சில் முறையிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், சசிதரன் 50% இட ஒதுக்கீடு ரத்து செல்லாது எனவும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரனையில் மாணவர்கள் தரப்பு வாதம் நிறைவு பெற்றது. நாளை மருத்துவ கவுன்சில் வாதம் தொடங்க உள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவக்கபட்டுள்ளது.