பெற்றோர் வங்கி கடனை செலுத்தவில்லையா? பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடையாது... சென்னை ஐகோர்ட் அதிரடி

First Published Jun 28, 2018, 3:11 PM IST
Highlights
Parents do not pay bank loan Children have no education loan


வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு, தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

வாங்கிய கடனை தந்தை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக் கடன் வழங்க மறுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதால் மக்கள் பணம் வீணாகிறது. என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்பச் செலுத்த இயலுமா என வங்கிகள் ஆராய்ந்து கடன் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். கடன் என்பது சிறியதோ, பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆரபாய்தல் சரியே என்று தெரிவித்துள்ளார். 

அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு, வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

click me!