உதயநிதியின் தலைக்கு விலையை அதிகரித்த பரமஹம்ச ஆச்சார்யா!

By Manikanda Prabu  |  First Published Sep 5, 2023, 11:31 AM IST

உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பத்து கோடி ரூபாய் பத்தாது என பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார்


சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என்று தெரிவித்தார். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் புகார்களை அளித்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி, தமிழக பாஜக சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே, பரமஹம்ச ஆச்சார்யா எனும் அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், உதயநிதியின் படத்தை கத்தியால் வெட்டிய அவர், புகைப்படத்தை எரித்து சாம்பலாக்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரமஹம்ச ஆச்சார்யாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பத்து கோடி ரூபாய் பத்தாது என பரமஹம்ச ஆச்சார்யா தெரிவித்துள்ளார். கூடுதல் விலை கொடுத்தாலும் தகும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பத்து ரூபாய் சீப்பு போதும்.. நானே என் தலையை சீவிக்கொள்வேன் - ஆச்சார்யாவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

முன்னதாக, பரமஹம்ச ஆச்சார்யாவை தனது தாத்தா கலைஞர் கருணாநிதி ஸ்டைலில் டீல் செய்த உதயநிதி ஸ்டாலின், 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், நானே என் தலையை சீவிக்கொள்வேன். இதெல்லாம் எங்களுக்கு புதிதல்ல. இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!