திருப்பதியில் அலைமோதும் கூட்டம்..! 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்ய அனுமதி...!

 
Published : Oct 21, 2017, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
திருப்பதியில் அலைமோதும்  கூட்டம்..! 15 மணி  நேரத்திற்கு பிறகே  தரிசனம்  செய்ய  அனுமதி...!

சுருக்கம்

over crowd in tirupathi

தொடர் விடுமுறை காரணமாக  திருப்தியில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது

இதன் காரணமாக, சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் பல மணி நேரமாக  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது .

இலவச  தரிசனம் 

இலவச தரிசனதிற்கு காத்திருக்கும் பக்தர்கள் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பின்னர் தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படுகின்றனர்

அந்த அளவிற்கு பக்தர்கள் கூட்டம்  அலைமோதுகிறது திருப்தியில்.

சாதாரணமாகவே திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் தான் இருக்கும்.

இந்நிலையில்,தீபாவளி காரணமாக ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக திருப்திக்கு பக்தர்கள் படை எடுத்து உள்ளனர்

மேலும் ரூ. 300 கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கும் பக்தர்கள் கூட,மூன்று மணி  நேரத்திற்கு மேலாக காத்திருந்து தான் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க  கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது  

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு