திருத்தணியில் பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு! 40 பேர் படுகாயம்

 
Published : Oct 21, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
திருத்தணியில் பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு! 40 பேர் படுகாயம்

சுருக்கம்

Thriuthani Bus Accident

திருத்தணியில் பாதையில் இருந்து சுற்றுலா பேருந்து இறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா பேருந்து ஒன்றில் திருத்தணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பிறகு அவர்கள் பேருந்தில் புறப்பட்டனர். 

அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. அப்போது அருகில் இருந்த ஆட்டோ மீது பேருந்து விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது. 

இதில் ஆட்டோ ஓட்டுனர் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் சென்னை அரசு
மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு