
காய்கறி விலை அதிரடி உயர்வு...!
தீபாவளி விடுமுறை மற்றும் சரக்கு வரத்து கம்மி குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து வகையான காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அனைத்து விதமான காய்கறிகளின் விலையும் ஐம்பது சதவீதம் அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.
காய்கறி விலை
முருங்கை காய் –ரூ.170
அதாவது ஒரு கிலோ சிக்கன் வாங்கும் விலைதான் தற்போது முருங்கை காய் விலையும் என்பது குறிப்பிடத்தக்கது
கேரட்- ரூ.90
தக்காளி-ரூ.70
பீன்ஸ்-ரூ.70
கொத்தமல்லி ரூ-35
கத்தரிக்காய்ர ரூ70
வெங்காயம் ரூ -50
சின்ன வெங்காயம் ரூ.50
இந்த விலையேற்றம் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த அளவிற்கு விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
காரணம்,அனைத்து காய்கறிகளின் விலையுமே அதிரடியாக உயர்ந்துள்ளது.எப்போது இந்த காய்கறிகளின் விலை குறையும் என்பதே மக்களின் ஒரே கேள்வியாக உள்ளது