ஆஸ்கர் விருது வென்ற, ‘The Elephant Whisperers’ இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை.! மு.க.ஸ்டாலின் கவுரவிப்பு

By Ajmal KhanFirst Published Mar 21, 2023, 11:17 AM IST
Highlights

தாயை இழந்து தவித்த குட்டியானையை முதுமலை யானைகள் சரணாலய முகாமில் வைத்து வளர்த்தது தொடர்பான குறும்படமான ‘The Elephant Whisperers’ ஆஸ்கர் விருது வென்றதையடுத்து , அந்த குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

ஆஸ்கர் விருது- முதலமைச்சர் பாராட்டு

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும்  பொம்மன் மற்றும் திருமதி பெல்லி ஆகிய யானை பராமரிப்பாளர்களால் ஆறு மாத வயதில் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட "ரகு" யானைக் குட்டியை மேற்படி பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனத்துடன் பராமரித்தார்கள் என்பதை ஆவணப்படம் காட்டுகிறது. இப்படம் அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானைக் குட்டியான "அம்மு" பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.The Elephant Whisperers குறும்படம்  வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்டிருந்தது.  95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

யானை பராமரிப்பதாளர்களுக்கு பரிசு

இதனையடுத்து இந்த படத்தில் இடம்பெற்றிருந்த யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான  பொம்மன், பெல்லி தம்பதியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி பாராட்டினார். மேலும் இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், சென்னை தலைமைசெயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் The Elephant Whisperers’இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குறும்பட இயக்குனர் கார்த்திகி ஆஸ்கர் விருதை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்

இதையும் படியுங்கள்

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்,பெல்லி தம்பதி முதலமைச்சருடன் சந்திப்பு.! தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய ஸ்டாலின்
 

click me!