வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் !! இன்று முதல் அமலுக்கு வருகிறது !!!

First Published Sep 6, 2017, 7:05 AM IST
Highlights
original driving license must from today


வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் எரிமங்களை வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்தார். இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வாகன ஓட்டிகள் கட்டாயம் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும், போலீசார் ஆய்வு செய்யும் போது 6 முக்கிய காரணங்களுக்காக அசல் ஓட்டுநர் உரிமத்தை காட்ட வேண்டம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.

இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்.

2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு  தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

click me!