ஜல்லிக்கட்டுக்கு அனுமதி?  டெல்லியில் இருந்து திரும்பும் ஓபிஎஸ் இன்று அறிவிப்பாரா?

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி?  டெல்லியில் இருந்து திரும்பும் ஓபிஎஸ் இன்று அறிவிப்பாரா?

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி?  டெல்லியில் இருந்து திரும்பும் ஓபிஎஸ் இன்று அறிவிப்பாரா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத எழுச்சியை கண்டு மிரண்டு போன தமிழக அரசு உடனடியாக டெல்லியை தொடர்பு கொண்டு பிரதமரிம் அப்பாயின்மென்ட் கேட்டு வாங்கியது. இதையடுத்த டெல்லி சென்ற ஓபிஎஸ் மோடியை சந்தித்தார்..

ஆனால் பிரதமர் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால் இப்பிரச்சனையில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார்.

இதையடுத்து நேற்று இரவே  டெல்லியில் இருந்து  ஓபிஎஸ் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் முதலமைச்சரின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இப்பிரச்சனையில் நல்லது நடக்கும் பொறுத்திருங்கள் என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ரோத்தகி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசுக்கு  அவசர சட்டம் கொண்டு வர அதிகாரம் இருக்கிறது என்றும் அப்படி சட்டம் கொண்டுவந்தால் உச்சநீதிமன்றம் அதில் தலையிட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அந்த சட்ட சரத்தில் காளைகளை துன்புறுத்தாவண்ணம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் உற்சாகமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ் இன்று முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி