ஹிட்லர், முசோலினி, இடிஅமீனை மிஞ்சிய ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி.! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

Published : Jul 03, 2025, 08:04 AM IST
ops stalin

சுருக்கம்

தேனியில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் மீது போலீசார் நடத்திய தாக்குதல் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் காவல்துறை அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

OPS condemns police attack : தமிழகத்தில் லாக்அப் மரண சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், தேனியில் ஆட்டோ ஓட்டுநர் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த காவல்நிலையத்தின் காவலர்கள் 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு ஒரு கொடுங்கோல் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான் என்று சொல்லும் அளவுக்கு வன்முறை வெறியாட்டமும், அடக்குமுறையும், சட்ட விரோதச் செயல்களும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் விசாரணை மரணங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன், திருநெல்வேலி மாவட்டம், ஆமீன்புரத்தைச் சேர்ந்த சுலைமான், சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்; திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி; சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன்; மதுரை மாவட்டம், சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என இதுவரை கிட்டத்தட்ட 25 பேர் காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் காவல் துறை விசாரணையில் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி அன்று தேவதானப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிவித்து, அவரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்மீது காவல் துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதும், அவர் காவலர் காலில் விழுந்து கெஞ்சுவதும் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி

தேனியில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்

உள்ளது. இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேனி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

விசாரணை நியாயமாக நடைபெறவும், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஒட்டுநர் ரமேஷ் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல் துறையினருக்கு உண்டு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில், விசாரணை என்ற போர்வையில் கொடூரத் தாக்குதல் நடத்துவது என்பதும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது என்பதும் நியாயமற்ற செயல். குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தருவதுதான் காவல் துறையினரின் கடமையே தவிர, அவர்களின் உயிரை பறிப்பது அல்ல.

வாழவைப்பதற்கு தான் ஆட்சி- உயிர்களை பறிப்பதற்கு அல்ல

இதுபோன்ற செயல்களை காவல் துறையினர் தன்னிச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றன. 

இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதே தெரியாத ஒரு நிலை உருவாகிவிட்டது. பொதுமக்கள் மீது காவல் துறையினரின் கொடூரத் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று வெளிவராத நிகழ்வுகள் எத்தனை என்று தெரியவில்லை. மக்களை வாழவைப்பதற்குத்தான் ஆட்சியே தவிர, மக்களின் உயிர்களை பறிப்பதற்கு அல்ல. தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மூலம் கொடூரக் காட்சிகள் நிறைந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பது நிரூபணமாகி உள்ளது என ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎