ஒருபக்கம் அரசுக்கு எதிர்ப்பு; மற்றொரு பக்கம் அம்மா ஸ்கூட்டருக்கு வரவேற்பு - மக்களை என்ன சொல்ல ஏது சொல்ல மூமண்ட்...

First Published Feb 3, 2018, 9:05 AM IST
Highlights
Opposition to government Welcoming amma scooter


திருவள்ளூர்

திருவள்ளூரில் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெற ஒதுக்கப்பட்ட வாகனங்களை விட விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. அரசை ஒருபக்கம் எதிர்க்கும் மக்களே இன்னொரு பக்கம் திட்டத்தை வரவேற்று அதனைப் பெற ஓடுகின்றனர்.

மாநில அளவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் மற்றும் சுய தொழில் செய்யும் மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் (அம்மா ஸ்கூட்டர்) தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மொத்தம் 1646 வாகனங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த வாகனங்களை பெறவதற்கான விண்ணப்பங்கள், மகளிர் திட்ட அலுவலகம்,  ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் கடந்த 22-ஆம் தேதி முதல் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இதுவரையில், சரியான ஆவணங்களுடன் 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தும் உள்ளனர்.

ஆம். நீங்கள் நினைத்தது சரிதான், அரசு வேலைவாய்ப்பில் 1000 பணியிடங்களுக்கு 10 ஆயிரம் விண்ணப்பிப்பார்களே! அதுபோலதான். வெறும் 1646 வாகனங்களுக்கு இவ்வளவு  பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்னமும், விண்ணப்பங்களை பெற குவிந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதே இதில் வியக்கத்தக்கது.

மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்தில் முறைகேடு எதுவும் நடைபெறக் கூடாது என்பதற்காக நாள்தோறும் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைன் மூலம் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் ஏராளமானோர் மானிய விலையில் ஸ்கூட்டர் கிடைக்கிறது என்ற ஆசையில்  விண்ணப்பிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருபக்கம் அதிமுக அரசு, பேருந்து கட்டணத்தை உயர்த்திவிட்டது, குடிநீர் பிரச்சனையை போக்கல, பாஜகவுக்கு சொம்படிக்குது, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு என்று மக்களிடம் வசை வாங்கினாலும், இன்னொரு பக்கம் மானிய விலையில் ஸ்கூட்டர், இலவசம் என்று சொன்னவுடன் முந்தி அடித்து கொண்டு செல்லும் மக்களை நொந்துக் கொள்வதை தவிர வேறு என்ன செய்வது?

எல்லாம் சரி! அதிமுக அரசு பற்றி நாம் மறந்த ஒரு விஷயம் இருக்கு. இலவச திருமணம், வெள்ளம் நிவாரணப் பொருட்கள், இலவச மடிக்கணினி, தையல் எந்திரம், இலவச மாடுகள்  என அனைத்திலும் அதிமுகவுக்கு என்று ஒரு கலர், விதவிதமா ஸ்டிக்கர்ஸ் என்று ஒட்டி அசத்தினார்களே இந்த ஸ்டிக்கர் பாய்ஸ்.  இப்போ ஸ்கூட்டரிலும் அந்த மாதிரி ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்தா என்ன பண்ணுவாங்க?

click me!