Latest Videos

சாவில் கூட அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்! ஒன்றை மட்டும் புரிஞ்சுக்கோங்க! தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆவேசம்!

By vinoth kumarFirst Published Jun 22, 2024, 1:09 PM IST
Highlights

சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போல் நாங்கள் இல்லை என தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். 

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் என்ற பகுதியில் விஷச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 21 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம். முதல்வர் பதவி விலக வேண்டும். 

இதையும் படிங்க: அவர்கள் கூறிய பச்சை பொய்யால் தான் இவ்வளவு பலிகள்! இதற்கு சிபிஐ விசாரணை தான் சரியாக இருக்கும்! இபிஎஸ்!

மேலும், விஷ சாராய விவகாரத்தில் ஆட்சியரே தவறான தகவல் தந்துள்ளதால் ஆணைய விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை தேவை என எதிர்கட்சிகள் கூறிவருகின்றனர். இந்நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போல் நாங்கள் இல்லை என தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது. தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:  நொடிக்கு நொடி அதிர்ச்சி.. கெட்டுப்போன மெத்தனால்! முன்பே கண்டறிந்த சாராய வியாபாரி! சிபிசிஐடி விசாரணையில் பகீர்

சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று ‘எதிர்காலத்தில் நடக்காது’ என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு என தெரிவித்துள்ளார். 

click me!