"ஆப்ரேஷன் 2.0” ஓட ஓட விரட்டி பிடிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள்.. சிறப்பு வேட்டையில் போலீசின் தரமான கவனிப்பு..

Published : Mar 30, 2022, 04:40 PM IST
"ஆப்ரேஷன் 2.0” ஓட ஓட விரட்டி பிடிக்கப்படும் கஞ்சா வியாபாரிகள்.. சிறப்பு வேட்டையில் போலீசின் தரமான கவனிப்பு..

சுருக்கம்

தமிழகத்தில் “ ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற திட்டத்தில் 2 நாட்களில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் “ ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” என்ற திட்டத்தில் 2 நாட்களில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற சிறப்பு நடவடிக்கை தமிழக காவல்துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0:

அதில்,கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, இந்த மாதம் 28-ம் தேதி முதல் ஏப்.27 வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் சட்டம்:

கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தனிப்படை:

போதைப்பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் நிலைய ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும். பார்சல் மூலம் மாத்திரை, போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களைக் கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

நேரடி கண்காணிப்பு:

இந்த பணிகளை சட்டம் ஒழுங்குகூடுதல் டிஜிபி தினமும் கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும். அதேபோல், சென்னை,ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக இந்தப் பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த 28-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் போலீசார் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தினர். சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் நடைபெற்ற தீவிர கஞ்சா வேட்டையில் 2 நாட்களில் மட்டும் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைதாகி உள்ளனர். 300 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 50 பேர் வரை கைதாகி உள்ளதாக தெரிகிறது. கோவையில் மட்டும் ஒரே நாளில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரோட்டில் 10  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக கடந்த 06.12.2021 முதல் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி விற்பனைகளை தமிழகத்தில் தடுக்கும் பொருட்டு  "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 6,623 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!