இனி 75% பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி... அன்பில் மகேஷ் அதிரடி!!

By Narendran SFirst Published Mar 18, 2023, 9:30 PM IST
Highlights

75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே இனி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே இனி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பில் ஆல் பாஸ் ஆனவர்கள். கொரோனா காலத்தில் தேர்வு எழுத முடியாமல், கடந்த ஆட்சி காலத்தில் ஆல் பாஸ் ஆனவர்கள் தான் தற்போதைய 12 ஆம் வகுப்பு பேட்ஜ்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

அவர்களுக்கு தேர்வு பயம் என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும். எனவே அவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, சிறப்புப் பிரிவாக அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் எனக் கூறினோம். தொடர்ந்து இந்த நடைமுறை பின்பற்றப்படாது.

இதையும் படிங்க: ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும், பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற செய்தி தவறானது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் உள்ள நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பே அது. வரும் கல்வியாண்டில் (2023 - 2024) 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது. அதுவே இனி பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!