ஜெயலலிதாவின் இடத்தை சசிகலாவால் மட்டுமே நிரப்ப முடியும்…

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஜெயலலிதாவின்  இடத்தை சசிகலாவால் மட்டுமே நிரப்ப முடியும்…

சுருக்கம்

ஜெயலலிதாவின்  இடத்தை சசிகலாவால் மட்டுமே நிரப்ப முடியும் என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டரங்கில், மாவட்ட அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சர் மேலும் பேசியது:

“ஏழை, எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இவரது இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.

இந்த நிலையில், அவரது இடத்தை பூர்த்தி செய்ய சசிகலாவால் மட்டுமே முடியும் என்றார்

அமைச்சர் உதயகுமார் பேசியது; “மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்க வேண்டும். மேலும், அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்று, தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு சசிகலா வருகை தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா பேரவை மாவட்டச் செயலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவைத் தலைவர் துரை, நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றிய செயலர்கள் என்.கே. கர்ணன், சிவப்பிரசாகம், சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் செல்வக்குமார், பூவை த. செழியன், எம். வீரபாண்டியன், மகளிரணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி, இலட்சுமி, ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!