வளர்ச்சித் திட்டப் பணிவுகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்…

First Published Dec 17, 2016, 10:46 AM IST
Highlights


நாமக்கல்,

பள்ளிபாளையம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆசியா மரியம் திடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் ஊராட்சி, கே.பி.எல் நகர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ஐந்து பனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடப்பணியினையும், அதே ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.69.19 இலட்சம் மதிப்பீட்டில் மல்லிக்கரை - ஈரோடு சாலை முதல் பாப்பம்பாளையம் சாலை வரை அமைக்கப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப்பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாப்பம்பாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மையக்கட்டிடப்பணியினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பள்ளிபாளையம் ஒன்றியம் கொக்கராயன்பேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பதற்காக கட்டப்பட்டு வரும் தொட்டியினையும், இந்திரா நினைவு குடியிருப்புத்திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீட்டினையும், பாப்பம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடப்பணியினையும், காடச்சநல்லூர் ஊராட்சியில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்தினையும், தாஜ்நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.31 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார். எலந்தக்குட்டை ஊராட்சி, புதுமண்டபத்தூரில் தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.2.76 இலட்சம் மானியத்தில் 23 நபர்கள் தங்கள் இல்லங்களில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிடப்பணியினையும், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகனமேடை என பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பள்ளிபாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமகிருஷ்ணராஜ், ஒன்றிபொறியாளர் சங்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், அருண், மலர்விழி, பிரகாஷ், உதவிபொறியாளர் மகபூப்பாஷா, பணி மேற்பார்வையாளர்கள் ரமேஷ், சசிகலா, சாலை ஆய்வாளர்கள் ஜானகி, மேகலா மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

click me!