போலீஸ் ஸ்டேஷன் படிக்கட்டை மிதிக்காமலேயே கம்ப்ளைன்ட் கொடுக்கனுமா? - இதை படியுங்கள்..!!!

 
Published : May 09, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
போலீஸ் ஸ்டேஷன் படிக்கட்டை மிதிக்காமலேயே கம்ப்ளைன்ட் கொடுக்கனுமா? - இதை படியுங்கள்..!!!

சுருக்கம்

online fir in tamilnadu

தமிழ்நாடு காவல்துறை வலைதள முதல் தகவல் அறிக்கை Online FIR சமீபத்தில் துவங்கியது.

இந்த புது சேவையின் மூலம் புகார் கொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்று தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலை தவிர்த்து வீட்டில் இருந்த படியே இணையதள உதவியுடன புகார் கொடுக்கலாம்.

இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹர்யானா, உ.பி போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம்.தவறான புகார்களை பதிவெற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையதளத்துக்கு செல்லவும்.

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1

எப்ஐஆர்-க்கு தேவையான் விவரங்களை கொடுத்த பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீட்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அனைத்தும் செய்து முடித்த பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்ஐஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

tamilnadu police citizen portal என்ற இத்தளத்தில் உங்கள் எப்ஐஆர் எண்ணை பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது எனபதை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற தொழிநுட்ப முன்னேற்றங்கள் நமது நேரத்தையும் அலைச்சல் போன்றவற்றை அதிக அளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான தீர்வு விரைவில் கிடைக்கும். எனவே இது போன்ற தொழில் நுட்பங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெறுவோம். 
 

PREV
click me!

Recommended Stories

அனிதா மரணத்தை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
நைட்டு நேரத்துல அந்த பொண்ணு வீட்ல உனக்கு என்ன வேலை..? மாசெ.வை தூக்கியடித்த தவெக..