ஒருபக்கம் கஞ்சா; இன்னொரு பக்கம் சாராயம் - வளைச்சு வளைச்சு விற்கும் பெண்கள்...

 
Published : May 21, 2018, 06:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஒருபக்கம் கஞ்சா; இன்னொரு பக்கம் சாராயம் - வளைச்சு வளைச்சு விற்கும் பெண்கள்...

சுருக்கம்

One side cannabis Another side liquor women selling

திருவாரூர்

திருவாரூரில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற பெண்ணும், லிட்டர் லிட்டராக சாராயம் விற்ற பெண்ணும் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலாளர்கள் கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, லெட்சுமாங்குடியில் உள்ள மரக்கடை என்ற இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின்பேரில் மரக்கடையில் உள்ள துரைபாண்டி மனைவி ஜெயமணி (58) என்பவரது வீட்டில் காவலாளர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த வீட்டில் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

கஞ்சாவை பறிமுதல் செய்த கூத்தாநல்லூர் காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்து ஜெயமணியை கைது செய்தனர். 

இதேபோல, கோரையாறு பகுதியில் அனுமதியின்றி புதுச்சேரி மாநில சாராயம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி லலிதா (58) என்பவரிடம் 110 லிட்டர் சாராயத்தை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து கூத்தாநல்லூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து லலிதாவை கைது செய்தனர்.  

PREV
click me!

Recommended Stories

பரபரப்பில் திருச்செந்தூர்.. ஒரே போன் கால்.. காரில் வந்தவர்களை சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்