கொரோனா அச்சம் தேவையில்லை சொன்னா மட்டும் பயம் போயுடுமா? தமிழ்நாட்டின் நிலை என்ன? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Published : Jan 05, 2024, 09:59 AM ISTUpdated : Jan 05, 2024, 10:40 AM IST
கொரோனா அச்சம் தேவையில்லை சொன்னா மட்டும் பயம் போயுடுமா? தமிழ்நாட்டின் நிலை என்ன? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சுருக்கம்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42-வயது நபர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இணை நோய் உள்ளவர்களை நோய் பாதிப்பில் இருந்து தடுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- Covid JN.1: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று; சென்னையில் ஒருவர் பலி

இதுதொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து அண்டை மாநிலங்களில் மிகக்கடுமையாக பரவி வரும் நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42-வயது நபர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

#CovidIsNotOver என்று தொடர்ந்து வலியுறுத்தி உருமாறிய ஜே.என்1 வைரஸ் பரவி வருவதை சுட்டிக்காட்டி தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு இதுவரை என்ன மாதிரியான வழிமுறைகளை மக்களுக்கு வகுத்திருக்கிறது? மாநில எல்லைகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எந்தளவுக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றது? வெறுமனே அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் தணிந்து விடுமா? என தெரியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வதாகவும், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி.. சென்னையில் நாளை போக்குவரத்து அதிரடி மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

நம் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன? இணை நோய் உள்ளவர்களை நோய் பாதிப்பில் இருந்து தடுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? தடுப்பூசிகளின் இருப்பு என்ன? இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு அளவீடு என்ன? குறிப்பாக, வைரஸ் குறித்த செரோ-சர்வேயின் (SERO Survey) தரவுகள் என்ன சொல்கின்றன? என விடை தெரியாத பல கேள்விகளுக்கு “பதில் மட்டுமல்ல செயலில் காட்ட வேண்டியது அரசின் கடமை. இம்மரணத்திற்கு பிறகாவது மக்களை பதட்டமடைய செய்யாமல், சுகாதாரத்துறை விழித்துக்கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்