ரூபெல்லா தடுப்பூசி போட்டதால் நிகழ்ந்த விபரீதம்.. பள்ளி மாணவி உயிரிழந்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

 
Published : Apr 04, 2017, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ரூபெல்லா தடுப்பூசி போட்டதால் நிகழ்ந்த விபரீதம்.. பள்ளி மாணவி உயிரிழந்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

சுருக்கம்

one girl student is dead in cause of rupella injection

தூத்துக்குடி அருகே ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாகவே தங்களது குழந்தை இறந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி, கணவரை இழந்த இவர் கூலி வேலை பார்த்து தனது மகள் காமாட்சியுடன் சேர்ந்து வாழ்கிறார். இந்நிலையில் காமாட்சி அந்த பகுதியில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். 

இந்நிலையில் தமிழக அரசு ரூபெல்லா தடுப்பூசியை கண்டிப்பாக பள்ளி குழந்தைகள் போடவேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் காமாட்சிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி சின்னக்கல்லுபுரத்தில் உள்ள கிங் ஆஃப் கிங்க்ஸ் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. 

தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே காமாட்சிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காமாட்சி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காமாட்சி உயிரிழந்தார். 

இதையடுத்து ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாகவே காமாட்சி இறந்துள்ளதாகக் கூறி காமாட்சியின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Tamil News Live today 23 December 2025: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்