மீண்டும் சர்ச்சையாகிறது கொடநாடு – ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…!!!

 
Published : Jul 03, 2017, 07:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மீண்டும் சர்ச்சையாகிறது கொடநாடு – ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…!!!

சுருக்கம்

one employee is again death in neelakiri kodanadu estate

நீலகிரி கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியலையை உருவாக்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கொடநாடு எஸ்டேட். இங்கு காவலாளியாக வேலைப்பார்த்த ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

மேலும் மற்றொரு காவலாளி படுகாயமடைந்தார். இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மற்றொரு குற்றவாளி சயான் காரில் தப்பியபோது, விபத்து ஏற்பட்டு அவரது மனைவி, 5 வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். ஆனால், சயான் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநகராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ். இவர் இன்று செங்கரை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

SIR பணிகள் ஓவர்.. புதுவையில் 85500 வாக்காளர்களின் பெயர்களை தூக்கி எறிந்த தேர்தல் ஆணையம்..
அடுத்த 3 மணி நேரம்! எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?