தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கொரோனா… ஒருவர் உயிரிழப்பு!!

Published : Jul 05, 2022, 09:08 PM IST
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கொரோனா… ஒருவர் உயிரிழப்பு!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,662 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,662 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு திடீர் சரிவு.. உயிரிழப்பும் குறைவு.. நிம்மதி பெருமூச்சு விடும் பொதுமக்கள்.!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,060 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,027 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,765 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,512 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,33,299 ஆக உள்ளது.

இதையும் படிங்க: மக்களே உஷார்.! சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

மாவட்ட வாரியாக: அரியலூர் 8, செங்கல்பட்டு 373, சென்னை 1,060, கோயம்புத்தூர் 137, கடலூர் 14, தர்மபுரி 8, திண்டுக்கல் 7, ஈரோடு 35, கள்ளக்குறிச்சி 15, காஞ்சிபுரம் 89, கன்னியாகுமரி 72, கரூர் 9, கிருஷ்ணகிரி 18, மதுரை 50, மயிலாடுதுறை 8, நாகப்பட்டிணம் 6, நாமக்கல் 19, நீலகிரி 9, பெரம்பலூர் 17, புதுகோட்டை 10, ராமநாதபுரம் 4, ராணிப்பேட்டை 28, சேலம் 42, சிவகங்கை 18, தென்காசி 31, தஞ்சாவூர் 27, தேனி 15, திருப்பத்தூர் 3, திருவள்ளூர் 132, திருவண்ணாமலை 38, திருவாரூர் 9, தூத்துக்குடி 64, திருநெல்வேலி 73, திருப்பூர் 19, திருச்சி 112, வேலூர் 14, விழுப்புரம் 24, விருதுநகர் 41 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!