‘ஒணம்’ பண்டிகையும் பிரிக்க முடியாத ‘தமிழ் கலைஞர்களும்’…300 ஆண்டுகளாக பத்மநாப சுவாமி கோயிலுக்கு ‘ஓணம் வில் தயாரிப்பு’…

First Published Sep 1, 2017, 10:44 PM IST
Highlights
Onam vil

‘ஒணம்’ பண்டிகையும் பிரிக்க முடியாத ‘தமிழ் கலைஞர்களும்’…300 ஆண்டுகளாக பத்மநாப சுவாமி கோயிலுக்கு ‘ஓணம் வில் தயாரிப்பு’…

கேரளா மக்களால் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் ஒணம் பண்டிகை இன்னும் 2 நாட்களில் கொண்டாடப்பட உள்ளநிலையில், அங்குள்ள  பத்மநாப சுவாமி கோயிலுக்கு வழங்கப்படும்  ‘ஓணம் வில்’ கடந்த 300 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கலைக் குடும்பத்தினரே தயாரித்து வழங்குகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால், கேரளாவில் ஓணம் பண்டிகையும், தமிழகக் கலைஞர்களும் பிரிக்கமுடியாத அளவில் உள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த வனியமூலா விளயல் குடும்பத்தாரே கடந்த 300 ஆண்டுகளாக  பத்மநாப சுவாமிக்கு ‘ஓணம் வில்லை’ தயாரித்து கொடுக்கிறார்கள்.

திருவாங்கூர் மகராஜா காலத்தில் இவர்களின் முன்னோர்கள், திருவனந்தபுரத்துக்கு அரசரின் அழைப்பின் பேரில் குடிபெயர்ந்தனர். அன்று முதல் இந்த ஆண்டு வரைவிஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்தஓணம்வில் தயார் செய்து கொடுக்கிறார்கள்.

வில் போன்ற மரப் பலகையில் அழகிய வண்ணங்கள் தீட்டி, அதில் கிருஷ்ணரின்தசாவதார உருவங்களும் கண்களைக் கவரும் வகையில் வரையப்பட்டு இருக்கும். ஆனந்த சயணம், தசாவதாரம், விஷ்ணு, ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட உருவங்கள் வரையப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஓணம் வில்லுக்கான தேவை மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிக பரபரப்பாகி விடுகின்றனர். இந்த ஓணம் வில் வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும், வளர்ச்சி , மன அமைதி இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நாளன்று அதிகமான மக்கள் ஓணம்வில் வாங்கிச்செல்வர்.

ஓணம்வில் செய்து வரும் பினுகுமார் ஆசாரி கூறியதாவது-

 பத்மநாப சுவாமி கோயிலுக்கு ஓணம் வில் தயாரிக்கும் உரிமையை எங்கள் குடும்பத்தாருக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் அரசர் மார்தாண்ட வர்மாவழங்கினார். 18ம் நூற்றாண்டில்  பத்மநாப சுவாமி கோயில் புனரமைப்பு பணிகளுக்காக எங்கள் குடும்பத்தை அரசர் அழைத்துச்சென்றார். கோயிலின் சிற்பங்கள் உருவாக்கியதில் எங்கள் குடும்பத்தின் பணி மிகமுக்கியமானது.

எங்களின் குடும்பத்தின் வேலையைப் பார்த்து மகாராஜா எங்களுக்கு இந்த உரிமையை வழங்கினார். அப்போது இருந்து, இப்போது வரை நாள்கள்தான் ஓணம்வில் தாயாரித்து வருகிறோம். என்னுடன் இணைந்து என் உறவினர்களும் இதை குடும்பத் தொழிலாகச் செய்து வருகிறோம்.

இந்த வில் தயாரிக்க 41 நாட்கள் கடும்விரதம் இருந்து, மந்திரங்கள் ஜெபிப்போம். அதன் பின் 6 ஜோடி வில் தயாரித்து கோயிலுக்கு வழங்குவோம். அதன்பின் வழக்கமான வியாபாரத்துக்கான வில் தயாரித்து மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்குவோம். இப்போது ஓணம் வில் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

திருஓணம் தினத்தன்று அதிகாலையில்  பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று இந்த 6 ஜோடி வில்லை நாங்கள் ஒப்படைப்போம்.

இந்த வில் செய்ய கடம்பு மரத்தை பயன்படுத்துகிறோம். 4.5 அடி நீளத்தில் சிறிய பலகையாக வெட்டி எடுத்து வில் தயாரிக்கிறோம். இதில் பூசப்படும் வண்ணங்கள் அனைத்தும் இயற்கையாக தயாரிக்கப்பட்டவை, தாவரச்சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இறுதியாக பயன்படுத்தும் வார்னிஷ் மட்டுமே செயற்கை வண்ணமாகும். மற்றவகையில் அனைத்தும் இயற்கைதான். நாங்கள் கேரளாவின் பாரம்பரிய முரல்கலையில் வரையாமல், தமிழகத்தின் கலையில்தான் ஓவியங்களை வரைகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

tags
click me!