உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - சித்தராமையா அடாவடி...

 
Published : Mar 21, 2017, 08:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது - சித்தராமையா அடாவடி...

சுருக்கம்

On the orders of the Supreme Court of the State can not be open water - Siddaramaiah atrocity

உச்சநீதிம்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது எனவும், காவிரியில் நீர் இல்லை எனவும் கர்நாடக முத்லாமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்னாடக அரசுகள் மனுதாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் அனைத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளனர். மேலும் காவிரி வழக்கு விசாரணையை ஜூலை 11 தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், காவிரி அணையில் போதுமான நீர் இல்லை எனவும், எனவே தமிழகத்திற்கு நீர் திறந்து விட முடியாது எனவும் கர்னாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 25 December 2025: கிறிஸ்துமஸ் நாள்.. விழாக்கோலம் பூண்ட தேவாலயங்கள்..!
நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு